உள்நாடு | அரசியல் | 2019-01-20 08:26:59

ஜனாதிபதி நாடு திரும்பினார்

பிலிப்பைன்ஸூக்கு 4 நாள் அரச விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

நேற்றிரவு 11.50 மணியளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின்போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 கடன் திட்டங்களிலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டிருந்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts