உள்நாடு | அரசியல் | 2019-01-13 00:10:15

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி விசேட பிரித் பாராயண நிகழ்வு

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி 300 மகாசங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் விசேட பிரித் பாராயண நிகழ்வு இன்று (12) முற்பகல் ருவன்வெல்ல, லெவன்கம, சதாநன்தாராம விகாரையில் இடம்பெற்றது. 

இன்று முற்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, அந்த நிகழ்வில் பங்குபற்றினார். பிரித் பாராயணத்தை தொடர்ந்து மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றினார். 

பிரதேசத்தில் குறைந்த வசதிகளையுடைய விகாரைகளுக்கும், பிக்குகளுக்கும் தஹம் பாடசாலை பிள்ளைகளுக்கும் ஜனாதிபதியால் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

ருவன்வெல்ல, லெவன்கம, சதாநன்தாராம விகாராதிபதி திரிபிடகவேதி சாஸ்திரபதி சங்கைக்குரிய பேலியகொட சரனதிஸ்ஸ நாயக்க தேரரின் வழிகாட்டலில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பத்மதிலக பண்டார உள்ளிட்ட விகாரையின் நிர்வாக சபையினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தன்டுவலகனே சந்தோரதய பிரிவெனாவின் பணிப்பாளர் சங்கைக்குரிய அம்பன்பிட்டியே சரனபால தேரர் உள்ளிட்ட பிரதேசத்தின் மகாசங்கத்தினர், முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அதாவுத செனவிரத்ன, முன்னாள் பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, சப்ரகமுவ மாகாண ஆளுநர் கலாநிதி தம்ம திசாநாயக்க, ருவன்வெல்ல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பராக்கிரம அதாவுத உள்ளிட்ட பிரதேசவாசிகள் பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts