ஏ.எஸ்.எம்.அர்ஹம்

Lanka Tamil FM/TV வானொலியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு, இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்துடன் இணைந்து இன்று (18) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
விசேட அதிதியாக பொத்துவில் பிரதேச சுகாதார காரியாலய சுகாதார அதிகாரி Dr. உவைஸ் பாறுக் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பொலிஸ் பிரிவினர், சமூக அமைப்புகள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினர்.
இரத்ததானம் வழங்கியவர்களுக்கு Lanka Tamil வானொலியினால் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தனது நன்றியைத் Lanka Tamil வானொலி தெரிவித்தது.










