
🖋️(ஜெஸ்மி எம்.மூஸா)
சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளிக் கோட்ட அல்-ஹிக்மா வித்தியாலய அதிபராக எம்.எல்.ஏ.அன்வர் திங்கட் கிழமை (19.01.2026) கடமையினைப் பொறுப்பேற்கிறார்.
அதிபர் சேவை தரம் 111 இல் உள்ள சிலருள் நிருவாக மற்றும் தனியாள் திறமை உடையவராக இனங்காணப்பட்டவர் நண்பர் அன்வர்.
மருதமுனை அக்பர் சமூகம் எதிர்பார்த்திருந்த நிலையில் அப் பாடசாலையின் நிரந்தர அதிபர் பொறுப்பினைத் தவறியமை துரதிஷ்டவசமான நகர்வே.
பாடசாலையின் எதிர்காலம், சமுகத்தின் விருப்பு வெறுப்பு, ஆளுமை என்பவற்றைக் கருதாமல் சுயநலமான முடிவினை நோக்கும் வட்டங்களுக்கு நண்பர் அன்வரின் நியமனம் இறைவிருப்பத்தின் சாட்சியமாகும்.
நல்லதொரு எதிர்கால அடைவினை நோக்கிய முடிவில் நகர்ந்துள்ள நண்பர் அன்வரின் பணி சிறக்க வாழ்த்துகள்…