35 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலி கொண்ட அந்தப் பேரழிவையும் அதன் பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகக் கடைப் பிடிக்கப்படுகின்றது. இதன் பிரதான நினைவு நிகழ்வு காலி, பெரலிய சுனாமி நினைவிடத்துக்கு அருகில் இன்று காலை8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன் பிரதான நினைவு நிகழ்வு காலி, பெரலிய சுனாமி நினைவிடத்துக்கு அருகில் இன்று காலை8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோல் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் இன்று முற்பகல் 9.25 மணி முதல் 9.27மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி காரணமாக நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இம்முறை மாவட்ட ரீதியில் சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கவும் அனர்த்த மேலாண்மை மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.