-இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் வாழ்த்து –

அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத் தந்த இயேசுபிரானின் பிறந்த நாளைக் கிறிஸ்மஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் செய்தியாகும். சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின் மூலம் தவறான புரிதலை நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கை நெறிக்கு இந்தப் போதனைகள் வழிகாட்டுகின்றன.
கிறிஸ்மஸ் நன்நாளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருணைகாட்டி இனநல்லுறவுடன் கூடிய சுபீட்சமான நல்வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.
உலகிலுள்ள அனைத்து கிறஸ்தவ மக்களும் சகோதரத்துவத்துடன் அன்பு காட்டுபவர்களாகவும், இயேசுவின் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
இயேசுநாதரின் நல்ல பல போதனைகளை நினைவு கூர்ந்து அனைவரும் கிறிஸ்துமஸை நல்லிணக்கத்தோடும், புரிந்துணர்வோடும் கொண்டாடி மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.