மருதமுனை அந்-நூர் கல்வி நிலையத்தில் முதலாவது ஹாபிழ் கௌரவிப்பு நிகழ்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலில் இயங்கி வரும் அந்-நூர் கல்வி நிலையத்தில் குர்ஆன் முழுவதுமாக மனனம் செய்த முதலாவது ஹாபிழ் முஹம்மத் ஹாரிஸ் ஹம்தான் அஹமத் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (23) இஷா தொழுகையை தொடர்ந்து அந்நூர் கல்வி நிலையத்தின் உப தலைவர் பல் வைத்திய நிபுணர் டொக்டர் .எம்.ஐ.எம்.ஹபீல் தலைமையில் நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்நூர் கல்வி நிலையம், இஸ்லாமிய சூழலில் குர்ஆன், இஸ்லாமிய கல்வி நிலையமாக பணியாற்றி வருகிறது. 2018 ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி நேர அல்குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை பல மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்நூர் கல்வி நிலையத்தின் முதலாவது ஹாபிழ் (குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்தவர்) என்ற முதல் ஹாபிழ் மாணவன் இங்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதன் போது இம் மாணவனின் பெற்றோரும் பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் விசேட சொற்பொழிவாளராக கலந்து கொண்ட, கல்முனை குல்லியதுல் ஹாதி அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அல்-ஹாபிழ் எம்.எச். இர்பாத் (ரஷாதி) இறைவனின் அருட்கொடையில் குர்ஆனை சுமக்கும் உள்ளங்கள் குறித்தும் அவற்றுக்கு உடந்தையாக இருந்து செயல்படுகின்றவர்கள் பற்றியும் விரிவாக இங்கு விளக்கமளித்து உரை நிகழ்த்தினார்
இந்த நிகழ்வில் குறித்த மாணவனுக்காகவும் பள்ளிவாசலில் நிர்வாகத்தினர் ஓஸ் தான் குமார் மற்றும் அம்மா அல்லாவாசிகள் அனைவருக்கும் பீஸ் எடு துவா பிரார்த்தனையை பள்ளிவாசலில் பேஷ்இமாம். கியாஸ் பழகி நிகழ்த்தினார்.
ஒரு ஆண் முழுவதையும் மனனம் செய்து கொண்ட மாணவனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு அமைய இந்த கல்வி நிலையத்தில் உப தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஹபீல் அவர்களின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டி ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிவாசலின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ் எஸ் அபூல் கலாம், உப செயலாளர் ஏ.ஜே. லாஹிர் முன்னாள் தலைவர் ஏ.எல். சக்காப்அந்-நூர் கல்வி நிர்வாகத்தின் ஆலிம்களான அல்-ஹாபிழ் எம்.எச்.எம்.றைஸ் (ஷர்கி) , அல்-ஹாபிழ் எம்.ஐ.எம். நுஸ்கி (தப்திஹ்), அல்-ஹாபிழ் எம். எல்.எம்.உஸ்மான் (நூரி), அல்-ஹாபிழ் எம்.எஸ்.பஹீம், உலமாக்கள் கபீர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள், நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்





