அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கையின் கீழ், இலங்கையில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக FarmerNET.lk எனும் புதிய இணையக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட முதல் 24 மணித்தியாலங்களிலேயே 911 விவசாயிகள் இதில் ஆர்வத்துடன் பதிவு செய்துகொண்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகள் எவ்வித சிரமமுமின்றி ஒன்லைன் (Online) ஊடாக இந்த கட்டமைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள முடியும் என திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த ஏக்கநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த டிஜிட்டல் கட்டமைப்பு தொடர்பான தெளிவூட்டல்களை கிராமிய மட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வுத் திட்டமானது பெப். 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

