
மருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் முதலாம் கட்ட நேர்முகத்தேர்வில் தெரிவான 22 புதிய மாணவர்களை எமது கல்லூரியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வும் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் இன்ஷா அல்லாஹ் நாளை (17.01.2026) எமது கல்லூரியில் இடம்பெறுகிறது.
எமது கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ். A.A. முஹம்மது புழைல் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக அக்கரைப்பற்று அபூபக்கர் சித்திக் அரபுக் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க். M.M. கலாமுள்ளாஹ் (ரஷாதி) அவர்களும், சிறப்பு அதிதியாக எமது கல்லூரியின் முன்னாள் தலைவரும், தற்போதைய பிரதம ஆலோசகருமான சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எம் பதுறுத்தீன் அவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரியின் பிரதித் தலைவரும், மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதம இமாமுமான அஷ்ஷெய்க், அல்ஹாபிழ் A R. பைசல் கியாஸ் (பலாஹி) அவர்களின் கல்லூரி தொடர்பான அறிமுக உடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
கல்லூரியின் கௌரவ நிர்வாகத்தினர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
செயலாளர்
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை