
இந்தியாவின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே இன்று (10) தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதில் விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 6 பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘இந்தியாஒன் ஏர்’ (IndiaOne Air) நிறுவனத்தின் C-208 ரக சிறிய விமானம், ரூர்கேலாவுக்கு 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜல்டா என்ற பகுதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.


