வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு – உரிமையாளர்கள் கவனத்திற்கு!
இன்று (2026.01.07) பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் சுற்றித் திரிந்த மாடுகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, தற்போது நகர சபை மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளன.
✅ உரிமையாளர்கள் செய்ய வேண்டியது:
சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக நகர சபைக்கு வருகை தந்து, தண்டப்பணத்தைச் செலுத்தி உங்கள் கால்நடைகளை மீட்டுச் செல்லவும்.
⚠️ கடும் எச்சரிக்கை:
மீண்டும் மாடுகளை வீதிகளில் விடுபவர்களுக்கு எதிராக, இனி எவ்வித அறிவித்தலும் இன்றி நேரடியாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படும்.
நகரின் பாதுகாப்பிற்கும் விபத்துக்களைத் தவிர்க்கவும் கால்நடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தவிசாளர், நகர சபை, கிண்ணியா.
திகதி: 07.01.2026


