
Gem Sri Lanka 2026’ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இன்று (07) முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் ஆரம்பமானது.
அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்,
”இலங்கையை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண விற்பனையின் கேந்திர நிலையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்குத் தேவையான சட்டதிட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் உகந்த சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அதேபோன்று, இலங்கையின் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், சர்வதேசப் பங்களிப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் துறையினால் தனித்துவமான பங்கொன்றை ஆற்றக்கூடிய இயலுமை இருக்கின்றது” என தெரிவித்தார்.
இக்கண்காட்சி தொடர்ந்து நாளை (08) மற்றும் நாளை மறுதினம் 09ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக Ceylon Gem and Jewellery Traders Association (CGJTA) தலைவர் ரிஸ்வான் நயீம் தெரிவித்தார்.

















