உள்நாடு | அரசியல் | 2020-08-25 08:18:38

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌஷாடை கட்சியிலிருந்து இடைநிறுத்திய மக்கள் காங்கிரஸ்.

(ஹுதா உமர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பு உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.

கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட்டின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் கட்சிக்குப் பாதகமாக அமைந்ததனாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்பதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலத்தில் அம்பாறை மாவட்டத்தை வெல்வோம் என்ற கோரிக்கையுடன் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்ததன் வெளிப்பாடாகவே இந்த முடிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது, 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts