பிராந்தியம் | பொருளாதாரம் | 2020-04-01 16:51:11

கொரோனாவினால் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைக்கு வீட்டில் பயிர் செய்யலாம்:ஏ.எல்.எம்.ஹம்சா

(ஒலுவில் ஆதிக்)

நாட்டில் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் எதிர் நோக்கும் வறுமையை ஒழிக்கும் சில நடவடிக்கையை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ஏ.எல்.எம்.ஹம்ஸா அவர்கள் இன்று ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.அவர் கூறிய கொரோனாவுக்கான வேலைத்திட்டம்....,

1) இலங்கையில் வாழ்கின்ற சொந்தங்கள் உங்களது வீடுகளில் வீட்டுப் பயிர் செய்கையை மேற் கொள்ளுதல்.

2) அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் ஏனைய பயிர் அல்லது மரக்கறி வகைகள் செய்கைகளையும் விவசாயிகள் ஈடுபடுதல்
உதாரணம் : புடலை,வெண்டி,கொச்சிக்காய், பீர்க்கு.

3}மீனவர்கள் மீண்பிடியை அதிகம் மேற் கொள்வதன் ஊடாக கருவாட்டு உற்பத்திகளை மீனவர்கள் அல்லது வீட்டில் உள்ளவர்கள் உற்பத்திகளை மேற் கொள்ளல்
# இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடுகள் மற்றும் சுத்தமான சுகாதாரமான உணவுகளையும் பெற்றுக் கொள்ள முடியும் அது மட்டுமல்ல வறுமையில் இருந்தும் நாட்டு மக்கள் விடுபடலாம்

#கொரோனா நாட்டில் அதிகரிக்குமாயின் சட்ட திட்டங்கள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது இதனால் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்க்கு பயணிக்க முடியாத நிலை ஏற்ப்படும் மற்றும் ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ளவர்கள் வெளியே பயணிக்க முடியாத நிலை ஏற்படலாம் இதனால் உணவு தட்டுப்பாடு நிலவும்.

#அதுமட்டுமல்ல வெளிமாவட்டத்திற்கு சென்று மரக்கறி வகைகள் கொள்வனவு செய்து வரும் நபர்களுக்கும் கொரோனா தொற்று வரும் அபாயம் உள்ளது.

எனவே என் அன்புக்குரிய இலங்கை வாழ் மக்களே பிரதேச மக்களே இதனை கருத்தில் கொண்டு செயற்ப்படுங்கள்
என தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts