உள்நாடு | சமூக வாழ்வு | 2020-03-24 01:30:47

கல்முனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுஇடங்களில்  தொற்றுநீக்கி விசிறப்பட்டு சுத்தம்செய்யப்பட்டன.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தற்போது கல்முனை பிரதேசத்தில் பொதுமக்கள் பயன்படுத்துகின்ற பொது இடங்களை தொற்றுநீக்கி விசிறி சுத்தப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
 

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.

 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பொதுமக்கள் ஊழியர்கள் பயன்படுத்தும் பல்வேறு பகுதிகளை தொற்றுநீக்கி விசிறி சுத்தப்படுத்தும் பணிகள் (22.03.2020) நடைபெற்றன. வெளிநோயாளர் பிரிவு,பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் பிரிவுகளும் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

 வைத்தியசாலையின் சிசேஸ்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ் உட்பட வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள், சுகாதார சேவைகள் பணிமனையின் பணியாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

 இதேவேளை கல்முனை பிரதான வீதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். 

அத்தியவசிய சேவையான சுகாதாரசேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கல்முனை வைத்தியசாலைகளுக்கு வரும் நோயளர்கள் சிகிச்சைகளை பெற்றுச் செல்வதையும் காணக்கூடிதாக இருந்தது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts