உள்நாடு | அரசியல் | 2020-03-20 19:30:04

முகநூல் அரசியல் பிரச்சாரங்களை நிறுத்தி விட்டு கொரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் - எச்.எம்.எம்.ஹரீஸ்

(எம்.என்.எம்.அப்ராஸ்,ஏ.எல்.எம்.ஷினாஸ்,றாஸிக் நபாயிஸ்,எஸ்.எல்.அஸீஸ்)

கொரானோ வைரஸ் தொற்று தொடர்பாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் கல்முனையில் உள்ள அவரின் அலுவலகத்தில் (20) இன்று
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

தேர்தல் காலம் என்பதால் சமுக வலைதளங்களில் பொதுவாக அரசியல் சார் விடயங்களே காணப்படுகின்றது.
எனவே நான் ஓர் அரசியல் கட்சி பிரதிநிதியாக இருந்தாலும்
நான் சகல கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஏனைய சமுக ஊடக துறை சார்ந்தவரிடம் நான் வேண்டிக்கொள்வது தயவு செய்து நாங்கள் எங்களது அரசியல் பிரச்சாரங்களை நிறுத்தி விட்டு தற் சூழலில்
கோரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக விழிப்புணர்வு,
ஆலோசனைகளை வழங்க அனைவரும் முன்வர வேண்டும்

இவ் தொற்று வைரசை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் பிரச்சாரம் செய்வதை தவிரத்து விட்டு பொது மக்களுக்கு இது தொடர்பான இது பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்

மேலும் நான் அரசாங்கத்திடம்
வேண்டுகொள் ஒன்றை விடுகிறேன்
இவ் சுய தடுப்பு முறை இருக்கும் வரை
அன்றாடம் ஜீவனோபாயம் செய்யும் மற்றும் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கும் தேவையான உணவு போதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

உலக நாடுகள் சில மக்களுக்கு அன்றாட உணவு பொருட்களை வழங்கி வருகின்றது.என்பதை குறிக்கொள்ள விரும்புகிறேன்.மேலும்பாரளுன்றம் கலைக்கபட்ட நிலையில் இவ் அவசர நிலையில் பாரளுமன்றத்தை கூட்டி இந் நிலையை ஆராய்ந்து கட்டுப்படுத்த முன்வர வேண்டும் .

பொது மக்கள் இவ் தொற்று நோய் தொடர்பான அறிவுறுத்தல்களை உரிய முறையில் மக்கள் பின்பற்ற வேண்டும் .
இவ் விடயத்தில் நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க எப்பொதும்
தாயார் நிலையில் உள்ளேன் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts