பிராந்தியம் | கல்வி | 1970-01-01 05:30:00

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு இறுதிநாள் போட்டி

(பாறுக் ஷிஹான்)

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி  நாள் நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை(20) பாடசாலையின் அதிபர்ஏ.ஜி.எம்  றிஸாத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது    பத்து வருடங்களுக்கு பின்னர்  இடம்பெற்றதுடன்  நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர்  எம்.எஸ் அப்துல் ஜலீல்  கலந்து சிறப்பித்தார்.தாருல்  சலாம், தாருல் முகுமா  மற்றும் தாருல் ஆஹிஸா ஆகிய இல்லங்களாக மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டதோடு   ஆரம்பப் பிரிவு தேர்ச்சி போட்டிகளிலும் மாணவர்கள் பங்குபற்றினர்.

இதில் சகலரினதும் கண் கவர்போட்டியாக விநோத உடைப் போட்டியும் இடம் பெற்றதோடு மாணவர்களது உடற் பயிற்சி கண்காட்சி சகல பார்வையாளர் களினதும் பாராட்டினைப் பெற்றது.போட்டிநிகழ்ச்சியில்  கௌரவ அதிதிகளாக பிரதி  கல்விப் பணிப்பாளர்களான எஸ். புவனேந்திரன் (நிர்வாகம்)  எ.எச் சபிக் பௌஸ்(முகாமைத்துவம்) திருமதி ஜிஹானா அலீப் (முகாமைத்துவம்)எஸ்..எல் அப்துல் றஹீம் (அபிவிருத்தி), திருமதி ஜயந்தி தர்சன்(திட்டமிடல்) ,  பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்,  பாடசாலை அபிவிருத்திச் சங்கஉறுப்பினர்களுடன் பெரும் திரலான பெற்றோர்களும் கலந்துசிறப்பித்தனர்.

மேலும்  போட்டி நிகழ்சிசிகளில் பங்கு பற்றிவெற்றி பெற்றமாணவர்களுக்கும் அணிகளுக்கும் கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts