பிராந்தியம் | கல்வி | 2020-02-13 14:18:29

சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் ஜப்பான் தூதரகம் தளபாடங்களை வழங்கியுள்ளது.

(பாறுக் ஷிஹான்)

சம்மாந்துறை கல்வி வலயத்தின் அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தனி அலகாகக் கொண்டு இயங்கும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு ஜப்பான் தூதரகம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்களை வழங்கியுள்ளது


இதற்கான நிகழ்வு அதிபர் எம்.ஏ.றஹீம் தலைமையில் புதன்கிழமை(12) காலை  இடம்பெற்றது


சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சியாமா சியாஸின் வேண்டுகோளின் பெயரில் ஜப்பான் தூதரகம் முன்னெடுக்கும் இவ்வேலைத்திட்டத்தில் இப்பாடசாலையில் தனியான கற்றல் வள நிலையமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது


அந்நிலையத்திற்கான தளபாடங்களே இன்று கையளிக்கப்பட்டன பிரதேச சபை உறுப்பினர் சியாமா சியாஸ் உள்ளிட்ட திட்ட அதிகாரிகளளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர


இத்தளபாடங்கள் விஷேட தேவையுடையோருக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டவையாகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts