பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-02-10 21:05:53

தாதி பாரிபாலன உத்தியோகத்தரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - சட்ட நடவடிக்கை இல்லையெனில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் - தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு

(ஏ.ஆர்.எம்.நபாயிஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் வைத்தியர்கள் ஒன்றியம் ஆகியன ஏற்பாடு செய்த இரு வேறு ஊடகவியலாளர்கள் சந்திப்பு  வைத்திய சாலையின் கேட்போர் கூடத்தில் (08) நடைபெற்றது.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் சில தனியார் தொலைக்காட்சிகளில்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாலியல் துஸ்பிரயோம் நடைபெறுவதாகவும் கடமைக்கு வருபவர்கள் கடமையில் ஈடுபடுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வெளியான செய்தி வைத்திய சாலையின் நற்பெயருக்கும் தாதி உத்தியோகத்தர்களுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த ஊடகவியளாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் செயலாளர் கருத்து தெரிவிக்கும் போது, இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் இவருக்கு எதிராக தாதி உத்தியோகத்தர்கள் பலரும் கிட்டத்தட்ட 145 குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் எமக்கு கிடைத்துள்ளன. 

இதற்குரிய விசாரணைகளை முடக்குவதற்கே இவ்வாறான பொய் குற்றச்சாட்டை தாதி உத்தியோகத்தர்கள் மீது சுமத்தியுள்ளார். இவ்வாறு பொய் குற்றச்சாட்டை ஊடகங்களுக்கு வெளியிட்ட தாதி பரிபாலன உத்தியோகத்தருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ததி உத்தியோகத்தர்களான நாம் எல்லோரும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.

இதே வேளை ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் வைத்தியசாலையின் தொடர் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. உத்தியோகத்தர்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சமூகத்தில் விமர்சனத்திற்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் ஒன்றியம் இங்கு நடாத்திய மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை தொடர்பாக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏ.எல்.எப்.ரஹ்மான் கருத்து தெரிவிக்கும் போது, தனியார் ஊடகத்திற்கு குறித்த தாதி பரிபாலன உத்தியோகத்தர் ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டுளார். தனக்கு இது பற்றி இதற்கு முன்னர் எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை. இவரது தகவல்கள் ஆதாரமற்றது. நிருவாகத்திற்கும் உத்தியோகத்தர்களுக்கும் பல்வேறு சந்தர்பங்களில் குந்தகம் விளைவித்து வருகின்றார். குறித்த தாதி பரிபாலன உத்தியோகத்தருக்கு எதிராக நிருவாக ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். என்று தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts