உள்நாடு | அபிவிருத்தி | 2020-01-27 15:12:44

ஜனாதிபதியின் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பப் படிவங்கள் வழங்கிவைப்பு

ஏ.எல்.எம்.ஷினாஸ்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய வறிய குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (24) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது

பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள 20 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்தும் அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் வருகைதந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.

முற்றிலும் இலவசமாக இந்த விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பப்படிவங்களின் தகைமைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் 350 தொழில் வாய்ப்புக்கள் என்ற ரீதியில் விண்ணப்பதார்கள் தெரிவுசெய்யப்படுவர்.
பின்னர் வெற்றிடம் காணப்படும் துறைகளில் 06 மாதகாலத்திற்கு கொடுப்பனவுகளுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts