உள்நாடு | அரசியல் | 2020-01-27 14:37:45

முன்னாள் அமைச்சர் சுபையிரின் கரங்களைப் பலப்படுத்தி சக்திமிக்க அரசியல் தலைவராக ஆக்குவோம்: இரா­ஜாங்க அமைச்­ச­ர் தயா­சிறி ஜய­சே­கர

(ஆதம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மத வேறுபாடுகளின்றி மூவின மக்களுக்கும் சேவையாற்றி வரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிரை எதிர்வரும் பாராளுன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்து ஒரு சக்திமிக்க அரசியல் தலைவராக ஆக்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினை புனரமைப்பது தொடர்பான கூட்டம்   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியி மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் தலைமையில் (24) ஏறாவூரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இனவாத சிந்தனை கொண்ட கட்சிகளாக உள்ளன. அவர்கள் இனவாத சிந்தனையுடனே தொடர்ந்தும் செயற்படுவார்கள் என கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய பல கட்சிகள் கருதுகின்றன. ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில், அந்தக்கட்சிகள் ஒருபோதும் இணைத்துக்கொள்ளப்படாது.

எனவே, தலைவர்கள் ஊடாக அன்றி நேரடியாக மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்கு சேவை செய்யவே நாம் விரும்புகின்றோம். பொதுமக்கள் இனவாத சிந்தனை கொண்டவர்களல்ல. தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருபோதும் இனவாதமாக செயற்படமாட்டார்கள் என நம்புகின்றேன். வாக்குகளைப் பெறுவதற்காகவே இனவாத அரசியல் தலைவர்கள் மக்களையும் இனவாதத்தின் பக்கம் திசை மாற்றுகின்றனர். எனவே மக்கள் புத்­தி­சா­துர்­ய­மாக சிந்­தித்து செயற்­பட வேண்டும். 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுபையிர் போட்டியிடவுள்ளார். அவரை வெற்றிபெறச் செய்வதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். கடந்த காலங்களில் இனவாதம் பேசி அரசியல் செய்தவர்களை புறம்தள்ளி மூவின மக்களுக்கும் சேவை செய்யக்கூடிய சுபையிர் போன்றவர்களக்கு வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

கடந்த மாகாண சபை ஆட்சிக்காலத்தில் அந்த சபையிலே அமைச்சராகவிருந்து சுபையிர் அவர்கள் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் கிழக்க மாகாணத்திலே வாழுகின்ற மூவின மக்களுக்கும் சேவையாற்றியுள்ளார். அதனாலே அவர் இன்று மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார். அவர் ஒரு இளம் அரசியல் தலைவராவார், அவருக்கு ஆதரவு வழங்கி அவரை வளர்த்தெடுப்பது இப்பிராந்திய மக்களின் பொறுப்பாகும்.

முன்னாள் அமைச்சர் சுபையிர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு செய்துவரும் பங்களிப்பு, மற்றும் கட்சி மீதுள்ள அவரின் விசுவாசம் என்பவற்றை கருத்திற்கொண்டு நாங்கள் சுதந்திரக்கட்சியினுடைய மாவட்ட தலைவர் பதவியினை அவருக்கு வழங்கியுள்ளோம். இதற்கு முன்னர் சுதந்திரக்கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பதவியினை யாருக்கும் கொடுத்த வரலாறு இல்லை. முதன்முதலாக சுபையிருக்கே நாம் அதனை வழங்கியுள்ளோம்.

குறிப்பாக, எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேர்தல் இடம்பெறவுள்ளது. ஆகையால் இப்போது இருந்தே முன்னாள் அமைச்சர் சுபையிரின் வெற்றிக்காக சகலரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts