உள்நாடு | சமூக வாழ்வு | 2019-12-06 16:20:06

மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை புகலிட சிறார்களின் ஒளிவிழா மற்றும் ஆய்வுக் கட்டுரை வெளியீடும்

- கஜானா - 

மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை புகலிட பாடசாலை சிறார்களின் ஒளிவிழா தினத்தை முன்னிட்டு புகலிட நிர்வாக பணிப்பாளரான அருட்திரு எஸ் எஸ் டெரன்ஸ் ஐயா அவர்களின் தலைமையில் கடந்த 04.12.2019 காலை 09.00 மணி அளவில் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் ஒளி விழா நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் அ.நவேஸ்வரன் கௌரவ விருந்தினராக உள்வாங்கல் பணியில் மாற்றுத்திறனாளிகளை உட்படுத்தல் திட்டத்தின் அவுஸ்ரேலியா நிறுவனத்தின்

தலைவர் டேவிட் அல்பர்ட் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பட்டிருப்பு வலயக் கல்வி மற்றும் விசேட உதவி கல்வி பணிப்பாளர் ந.செல்வநாயகி, மட்டக்களப்பு வலயக் கல்வி மற்றும் விசேட உதவி கல்வி பணிப்பாளர் ம.தயானந்தன், கல்குடா வலயக் கல்வி மற்றும் விசேட கல்விப் பணிப்பாளர்  ல.சீனித்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை அ.நவரத்னம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இச்சிறுவர் நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக இப்பாடசாலை சிறார்கள் இவர்களின் பெற்றோர்கள் 

மற்றும் இப் பாடசாலை ஆசிரியர்கள் இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர். 

அத்துடன் இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தினால் நான்காம் வருடம் மாணவி

எஸ்.பாத்திமா ஷர்பின் அவரினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி வருட ஆய்வான மாற்றுத்திறனாளிகளின் திறன் வெளிப்பாட்டில் கலைப்படைப்புகள் மட்டக்களப்பினை மையப்படுத்தியதாக பங்குகொள் ஆய்வு

என்பதனால் மெதடிஸ் புகலிட அமைப்பில் கடந்த 9 மாத காலம் பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவை கொண்ட மாணவர்களை கொண்டு இசை நாடகம் நடனம் மற்றும் கணினி வடிவமைப்பு தொடர்பான பல்வேறு செயற்பாடுகளில்

ஈடுபட்டதையொட்டி இவ்வமைப்பில் விசேட மாணவர்களில் உள்ள திறன்கள் மற்றும் அவர்களுடன் பங்குபற்றிய அனுபவங்களைக் கொண்டு இந் நிகழ்வின் இறுதியில் பல்கலைக்கழக மாணவரின் அனுபவப்பகிர்வு கொண்ட ஆய்வுக் கட்டுரை நூல் புகலிட நிர்வாக பணிப்பாளர் திரு எஸ்.எஸ்.ரெரன்ஸ் ஐயா தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts