உள்நாடு | சமூக வாழ்வு | 2019-12-05 17:50:09

டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் தொழில்சார் தன்மையுடைய அமைப்பாக ஒன்றிணைவது அவசியமாகும்

சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ‘டிஜிட்டல் ஊடகவியலாளர்களை அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கும் செயலமர்வு’ டிசம்பர் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் கொழும்பு த ஓஷன் ஹோட்டலில் நடைபெற்றது.

டிஜிட்டல் ஊடகத்துறையில் இணையத்தளம், ப்லொக், யூடியுப் மற்றும் பேஸ்புக் போன்ற இணையத்தள ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

‘டிஜிட்டல் ஊடகங்கள்’ தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து நடத்திய ஆய்வொன்றின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த செயலமர்வின் வளவாளர்களாக சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சீ.தொடாவத்த, செயலாளர் லசந்த டீ சில்வா, பொருளாளர் தாஹா முஸம்மில், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி மற்றும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறைப்பாட்டு அதிகாரி கமல் லியனாரச்சி ஆகியோர் கலந்துகொண்டதோடு, செயலமர்வை சுதந்திர ஊடக இயக்கத்தின் உப செயலாளர் தனேஷி யடவர ஒழுங்கமைத்தார்.

செயலமர்வில் ‘டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சட்டம்’ என்பது முதல் அமர்வாகவும் டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் இரண்டாவது அமர்வாகவும் நடைபெற்றது.

டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, தொழில்துறையில் இவற்றை எதிர்கொள்வதற்கு அமைப்பு ரீதியாக ஒன்றுபட வேண்டும் என்பதும் உணரப்பட்டது.
சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் (IFJ) Union to Union என்ற திட்டத்தின் அனுசரணையுடன் இந்த செயலமர்வு நடைபெற்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts