பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-02-12 06:57:11

உளவியல் ஆலோசனை மய்யத்தின் அம்பாரை மாவட்ட அங்குரார்பண நிகழ்வு

(எஸ்.கஜனா)

உளவியல் ஆலோசனை மய்யத்தின் ஏற்பாட்டில், இளைய சமுதாயத்தை வலிமை மிக்க சமூகமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கோடு
அம்பாரை மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு  கடந்த  (30) அன்று  மாவட்ட இனைப்பாளர் திரு .கிருஷ்ணமூர்த்தி பங்கு தந்தை fr.தேவானந்தர் அடியார்,பிரதேச இந்துமத குருக்கள் தங்கவேல் ஆகியோரின் தலைமையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இறை பிரார்த்தனையோடு ஆரம்பமாகி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக வளர்ந்து வரும் இளம் சமூதாயத்தினரிடையே தலைமைத்துவ பண்புகள் மற்றும் மனவுணர்வுகளைக் கையாளும் திறன் நலிவடைந்துள்ளமையினை காணக்கூடியதாகவுள்ளது. அதிகரித்துவரும் இளவயது தற்கொலைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது என்ற அடிப்படையில் இளைய சமுதாயத்தை வலிமை மிக்க சமூகமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கோடு வளர்ந்தோர் மற்றும் பாடசாலைகள் தோறும் மாணவர்களுக்கான குறுகிய தலைமைத்துவ பயிற்சிகளை(உளவியல் ஆலோசனை மைய்யம் )PAC நடாத்தி வருகிகின்றது.

இந்நிகழ்விற்கு பிரதேச மத குருக்கள்,சமூகஆர்வலர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் திருகோணமலை, மட்டடக்களப்பு மாவட்டத்தை அண்டியதாக அமைந்திருந்தபோதிலும் எதிர்கால திட்டங்களில் அம்பாரை மாவட்டத்தினையும் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கோடு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts