ஏ.எல்.எம்.ஷினாஸ்
Posted By Admin | Posted On 11/16/2019, 11:35:20 AM | Views 968

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

திகாமடுல்ல தேர்தல் மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இன்று (16) நடைபெறுகின்ற 08வது ஜனாதிபதி தேர்தலுக்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.
மாவட்டத்தின் தேர்தல் பணிகள் தொடர்பில் எமது இணையத்தள சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதியல் 174421 வாக்காளரும், சம்மாந்துறை தொகுதியில் 88217 வாக்காளரும், கல்முனை தொகுதியில் 76283 வாக்காளரும்,  பொத்துவில் தொகுதியில் 164869 வாக்காளரும்; என 5,03790 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 523 வாக்களிப்பு நிலையங்கிளில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளன. பொதுமக்கள் காலை 7.00மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை வாக்களிக்க முடியும்.
காலை வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்களை வினியோகிக்கும் பணி நேற்று (15) சுமுகமாக நடைபெற்றன.
மாவட்டத்தின் தேர்தல் கடமைகளுக்காக 7000 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதான வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப கல்லூரி செயற்படுகிறது.
பிரதான வாக்கு எண்ணும் நிலையம் உட்பட வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென 5000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லுதல் மீண்டும் வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து வருவதற்கான சகல வாகன ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு  ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts