கல்வி | கல்வி | 2019-11-12 17:57:31

புலவர்மணி மாணவி தேசியரீதியில் சாதனை :TM News ஊடக வலையமைப்பு வாழ்த்துகிறது..

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் தரம் 05ல் கல்வி கற்கும் மாணவி உவைஸ் பாத்திமா அனா தேசிய மட்ட ஆங்கில தின பிரதி பண்ணுதல் (Copy writing) போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியின் கையெழுத்துப் பிரதி (Copy writing) போட்டி அண்மையில் மட்டக்களப்பு சிசிலியா கல்லூரியில் நடைபெற்றது. இதில்; யூ.எப்.அனா(தரம்-05), ஏ.எஸ்.எப்.சம்றா(தரம்-11) ஆகிய இரு மாணவர்களும் முதலாம் இடங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தேசிய மட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றன. இதில் பாத்திமா அனா என்ற மாணவியே இவ்hறு தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினைபெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.

பாடசாலையின் பிரதி அதிபர் எம்.சி அப்துல் நஸார், உதவி அதிபர் எம்.எம.முஹம்மட் ஹஸ்மி, மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்திய ஆசிரியர்களான திருமதி எஸ்.எம். ஜெஸீர், எம்.ஐ.பஹ்மிதா, எம்.எம்.சுபுஹானி, எப்.ஐ.பஸாஹிர், ஆர்.றினாஸ் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவர்களின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் மேலும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

பாத்திமா அனா இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என எமது TM News ஊடக வலையமைப்பும் வாழ்த்துகிறது. சாதனை மாணவியை அண்மையில் எமது ஊடக வலையமைப்பு பாராட்டி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts