உள்நாடு | அரசியல் | 2019-11-11 01:14:57

ஞனசேர தேரரை ஹிஸ்புல்லா விடுதலை செய்யச் சொன்னது அவருடைய சுயநலலாபத்திற்கே அன்றி வேறில்லை -அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் கல்முனையில் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கடந்த அரசாங்கத்தில் மிக மோசமாக இனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை சித்தரவதைப்படுத்திய ஞனசேர தேரரை விடுதலை செய்யவேண்டும் என்று சொன்னவர் ஹிஸ்புல்லாதான் அது அவரது சுயலாபத்திற்காகவே சொன்னார். என அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுத்தீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த புதிய ஜனநாயக தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் (09) இரவு கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்இ

இந்த நாடு ஒரு அழகான நாடாகும். இங்கு நாம் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தில் நாம் இழந்தவை ஒன்றிரண்டல்ல உயிர்களையும் உடமைகளையும் சொத்துக்களையும் இழந்து அன்று வீதியில் நின்றோம். மீண்டும் இவ்வாறான ஒரு நிலைக்கு நாட்டை கொண்டுசெல்ல துடிக்கிறார்கள். சஜீத் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கடந்த 31 ஆம் திகதி என்னை மட்டுமல்ல அமைச்சர் றஊப் ஹக்கீம் உட்பட முஸ்லிம்இ சிங்களஇ தமிழ் தலைவர்கள்இ சமயப் பெரியார்கள் என இந்த நாட்டின் இரண்டுகோடி 25 இலட்சம் மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தம் தான் சஜீத் பிரேமதாசவுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகும்.

இந்த தேர்தல் விஞஞாபனத்தில் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்இ ஏனைய மதத்தவர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த யாராவது முனைந்தால் அவர் மதகுரவாக இருந்தாலும் கைக்கு விலங்கிட்டு சிறையில் அடைப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஏதிரணியினரின் ஆட்சியில் நாம் அமைச்சர்களாக இருந்த அனுபவம் இருக்கின்றது. இவர்களின் கைக்குள் இந்த நாடு வந்தால் சிறுபான்மை சமூகம் வாழமுடியாத அடிமைகளாகிவிடுவார்கள். பொருளாதார சொத்துகளுக்கு பாதுகாப்பில்லாமல் மதத் தலங்களுக்கு பாதுகாப்பில்லாமல் எதிர்காலம் நாசமாகி விடும். எமது பிள்ளைகள் வாழமுடியாமல் போய்விடும். சகோதரர்களே அற்ப சொற்ப ஆசைகளை காட்டி அதை தருகிறோம் இதை தருகிறோம் என்று கூறி ஏமாற்றி விடுவார்கள். ஏமாந்து விடாதீர்கள் கல்முனை பிரதேச செயலக பிரிப்புஇ சாய்ந்தமருது நகரசபை போன்றவற்றை வைத்து சஜீத் பிரேமதாசவை பழிதீர்த்து விடாதீர்கள் இந்தச் சமூகம் தோற்றுவிடும் என்று தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts