உள்நாடு | அரசியல் | 2019-11-10 23:20:42

கல்முனை மக்களின் பிரச்சினைக்கு  தீர்வினை பெற்றுத்தருவேன் - ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச கல்முனையில் சூழுரை

(ஏ.எல்.எம்.ஷினாஸ், ஏ.எம்.எம்.தானீஸ்)

கல்முனையில் உள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் பிரதேச செயலக பிரிப்பு விவகாரம் மற்றும் சாய்ந்தமருது மக்களின் பிரச்சினைகளை நான் ஜனாதிபதியானதும் நேரடியாக இங்கு வந்து தீர்த்துவைப்போன் என ஒன்றிணைந்த புதிய ஜனநாயக தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதா கல்முனையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் (09) கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச,

கல்முனை மாநகரத்தில் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து தருவேன். இதனை 17ஆம் திகதி ஆரம்பிப்பதற்காகவே நான் இந்த சிறிய குறிப்பில் எழுதிவைத்துள்ளேன். இந்த சந்தாங்கேணி மைதானத்தை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன். நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக கல்முனை நகரில் பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவோம். இங்குள்ள விவசாயத்துறையை கட்டியெழுப்புவேன். கரைவாகு நீர்ப்பாசன திட்டத்தை அபிவிருத்தி செய்வோம். கல்முனை- சாய்ந்தமருது பிரதேசத்தில் மீன்பிடி இறங்கு துறை ஒன்றை அமைத்து இங்குள்ள மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவேன்.
கல்முனைக்கும் பிரேமதாசவுக்குமான உறவு மறைந்த தலைவர் அஷ;ரப் அவர்கள் மற்றுமு; முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் போன்றோரது காலத்திலிருந்து தொடர்ததாகும் அது இன்றும் இருக்கிறது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
அளுத்கம, பேரவளை போன்ற இடங்களில் பள்ளிவாசல்களை உடைத்தவர்கள் சயாய்ந்தமருதுக்கு வந்து தீர்வினை பெற்றுத்தருவோம் என்கிறார்கள். இது எவ்வாறு இவர்களால் முடியும் என்று நான் கேட்கின்றேன். கல்முனைக்கு வந்து தமிழர்களிடத்தில் ஒன்றும் முஸ்லிம் மக்களிடம் வேறு ஒன்றும் சொல்லி ஏமாற்றுகிறார்கள். கல்முனையில் உள்ள முஸ்லிம் - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வினை நானே பெற்றுத்தருவேன். சஜீத் பிரமதாசவை நீங்கள் விசுவாசியுங்கள் 90 வீதத்திற்கும் அதிகமாக வாக்களித்து ஜனாதிபதியாக தெரிவுசெய்யுங்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்பதற்கு எனக்கு வேறு எந்தக் குழுவும் தேவையில்லை நான் இங்கு நேரடியாக வந்து தீர்வை பெற்றுத்தருவேன். என்ற உத்தரவாதத்தை தருகிறேன் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts