எமது நிருபர்
Posted By Admin | Posted On 2019-11-09 18:18:07 | Views 987

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

 

 

ஒளிப்படவியாலளர்  வைத்திய கலாநிதி  எஸ்.ஆகில் அஹ்மத்தின்  ஒளிப்படக் கண்காட்சி எதிர்வரும் 10, 11, மற்றும் 12ம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை  அக்கரைப்பற்று பாறூக் சரிபிதீன் கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

வைத்திய கலாநிதி ஆகில் அஹ்மத் கிழக்கின் வனவிலங்கு ஒளிப்படவியாலளர்களில்  மிகவும் பிரசித்தி பெற்றவராவார். இலங்கையிலும், வெளிநாடுகளிலுலும்  அவர் பல அரிதான வனவிலங்கு ஒளிப்படங் களை எடுத்துள்ளார்.   அன்மையில்  கென்யா நாட்டின் 'மசாய் மாறா' தேசிய வனத்துக்குச் சென்ற அவர் பல தரம்வாய்ந்த படங்களை எடுத்து வெளியீடுகளையும் செய்துள்ளார். 

தனிநபர் ஒருவர் அம்பாறை மாவடடத்தில் ஒளிப்படக் கண்காட்சி ஒன்றை ஒருங்கமைத்து நடத்துவது இதுவே முதல்  முயற்சியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts