பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-10-16 18:37:33

வெள்ளை பிரம்பு தினம் காரைதீவில் அனுஷ்டிப்பு

எம்.என்.எம்.அப்ராஸ்

சர்வேதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னட்டு காரைதீவு பிரதேச சபையின் ஏற்ப்பாட்டில் 

வெள்ளை பிரம்பு தினம் நேற்று

(15) அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது வெள்ளை பிரம்பு தினம் பற்றிய விழிப்புணர்வு பேரணியொன்றும்  இடம்பெற்றது .

காரைதீவு பிரதேச செயலகத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்த இப் பேரணி திருமால் சமூக சேவை வீதியினுடாக 

விபுலானந்த கலாசார மண்டபத்தை வந்தடைந்தது.

பின்னர் விபுலானந்த கலாசார மண்டபத்தில் 

விழிப்புலனற்றோரின்

கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறின .

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார 

சேவைப் பணிப்பாளர் ஜி.சுகுணன் மற்றும் கெளரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் ,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்

எஸ்.அருள்மொழி

மற்றும் விசேட அதிதியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகா தேவராஜா மற்றும் அதிகாரிகள் மதத்தலைவர்கள் ,பொதுமக்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது விழிப்புலனற்றோர் கெளவிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts