கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-10-16 20:14:27

'ஈஸ்டர்;: குருதிக் கசடும் மறுப்பும்' நூல் மீதான பார்வை

(ஜெஸ்மி எம்.மூஸா)

முஸ்லிம் சமூகத்தின் மீதான கறைபடிந்த எண்ணங்களையும் விமர்சனங்களையும் பக்குவமாக எடுத்துச் சொல்லும் வரலாற்றுத் திறன் மிக்க முயற்சியே 'ஈஸ்டர்;: குருதிக் கசடும் மறுப்பும்' ஆகும்

நிறம் பூசும் குழந்தைகள்(கவிதை) பஞ்ச பூதம்(நாவல்) இது புத்தனின் காலம்(நாவல்) ஆகிய பிரதிகளால் எழுத்துலகில் அறியப்பட்ட சாஜித் அகமட் குருதிபரவிய அட்டைப்படத்துடன் 'ஈஸ்டர்: குருதிக் கசடும் மறுப்பும்' என்ற பிரதி மூலம் வரலாற்றுப் பதிவாளனாக தம்மை அடையாளப்படுத்தியிருக்கின்ற முயற்சி பாராட்டுக்குரியது. கால ஓட்டத்தின் அதிர்வுகளையும் தடவல்களையும் அடுத்த தலைமுறையினருக்கும் மீட்டுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முன்னெடுப்புக்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கும் பஞ்சமும் பலவீனமுமானதொரு நிலை. அதிலிருந்து விடுவித்த பிரதியாக சுடச் சுட இவ்வாறான எண்ணக் கருவை பேசவும் சிந்திக்கவும் வைத்தமைக்காகவே நாம் அவரை பாராட்ட வேண்டியுள்ளது

இக்கட்டுரை ஈஸ்டர், குருதிக் கசடுஇ மறுப்பு என்கின்ற மூன்று உப விடயங்கள் மீதான சாரமாக அமைகிறது. சுனாமி மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஆகிய இரண்டுமே இலங்கை மக்களை அதிகம் பாதித்த அந்த ஞாயிறாகவும் அதே நேர உள்ளடக்கமுமாகவும் இருப்பது வேதனை தரும் வரலாற்றுப் பக்கத்தின் முக்கிய புரட்டல்களாகும்..

இக்கட்டுரை ஈஸ்டர், குருதிக் கசடு, மறுப்பு என்கின்ற மூன்று உப விடயங்கள் மீதான சாரமாக அமைகிறது. சுனாமி மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஆகிய இரண்டுமே இலங்கை மக்களை அதிகம் பாதித்த அந்த ஞாயிறாகவும் அதே நேர உள்ளடக்கமுமாகவும் இருப்பது வேதனை தரும் வரலாற்றுப் பக்கத்தின் முக்கிய புரட்டல்களாகும்..
குருதிக் கசட்டின் மணம் இன்னும் மூக்கினை உசுப்பிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மிகத்தைரியமாக இக்கதையாடலை முடுக்கிவிட்டிருப்பது நூலாசிரியரின் எதிர்காலத்தை வலுப்படுத்துகின்ற சகுணமாகவே நாம் பார்க்க வேண்யுள்ளது

ஈஸ்டர் ஞாயிறு தேவாலய ஆரதனையினை எம் கண் முன் கொண்டு வந்துஇ குண்டு வெடிப்பையும் அதன் சூத்திரதாரிகளையும் பதிவு செய்து, சஹ்ரானைத் தீவிரவாதியாக அடையாளப்படுத்தி, முஸ்லிம்கள் மீது வரலாறுகளில் வைக்கப்பட்ட குறிகளைத் தொடர்புபடுத்தி , பிரிவினைவாத இஸ்லாமியக் கொள்கைகளைச்சாடி, காத்தான்குடி தொடர்பான கேள்விகளை எழுப்பி, அரசியல் தலைமைகளின் மௌனங்களை விமர்சித்து, கிறிஸ்தவர்கள் ஏன் குறிவைக்கப்பட்டார்கள் அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வித துரோகமும் செய்ய வில்லையே என்பதை கேள்வியாக்கி, ஐம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாட்டை ஆதரித்து, முஸ்லிம்கள் இத்தாக்குதலை ஆதரிக்க வில்லை என்பதற்கு அழுத்தம் கொடுத்து, சோதனைச் சாவடிகளும் கைதுகளும் ஏற்படுத்திய தாக்கத்தினை பேசு பொருளாக்கி, நடுநிலை எனக் கூறிக்கொள்ளும் ஊடக விபசாரத்தைக் கேள்விக் குறியாக்கி, இவர்களுக்கு ஆயுதங்களும் பணங்களும் எவ்வாறு வந்தது? இவர்களுக்கு இவற்றை வழங்கியவர்கள் யாராக இருக்கலாம்? என்கின்ற தேடலை அதிகரிக்கச் செய்துஇ இலங்கையின் துறைமுகங்களையும் வளங்களையும் சூறையாடும் மேற்குலக நிகழ்ச்சி நிரலாக இது இருக்கலாமோ? என சந்தேகித்து கேள்விகள் பவவற்றால் பலதையும் வைத்துச் சமைத்துள்ள தலைப்புதான் ஈஸ்டர்;;;: குருதிக் கசடும் மறுப்புமாகும்.

ஈஸ்டர் தொடர்பில் வீடுகளிலும் வீதிகளிலும் கடற்கரையிலும் கூட்டங்களிலும் மௌனமாகவும் எதனையெல்லாமோ பேசினோமா? சிந்தித்தோமா? அவைகளையெல்லாம் சாஜித் தலைப்புக்குள் உள்ளடக்க பிரயத்தனம் செய்திருப்பது உரிமையோடு இதனுள் எம்மைப் பயணிக்க வைக்கிறது

காத்தான்குடியின் நகர அமைப்பு இஸ்லாமிய கிலாபத்தினை உருவாக்கும் திட்டத்துடன் அமைக்கப்பட்டதாகப் பலர் குற்றஞ்சாட்டினர் என்பதாக சாஜித்

சுட்டிக்காட்டியுள்ளார்.இவைகளுக்கு அப்பால் காத்தான்குடியின் புவியில் அமைப்பும் மக்கள் சிந்தனைப்பரவலும் பல வழிகெட்ட கூட்டங்களையும் அரவணைத்திருக்கிறது என்பதனை மறுதலிக்க முடியாது.

மருதமுனையிலிருந்து விரட்டப்பட்ட பயில்வானிசம் போன்றன அங்கீகரிக்கப்பட்ட பின்னணியில்தான் சஹ்ரானின் கொள்கை மாற்றமும் பார்க்கப்பட வேண்டியுள்ளது
1990 இல் காத்தான்குடிப் பள்ளிவாசலில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பல நூற்றுக்;கணக்கான வணக்கவாதிகள் உயிரிழந்தனர். இதனை ஞாபகப்படுத்தும் நோக்கில் குண்டு துளைத்த அப்பள்ளிவாயலின் துளை அடையாளத்தை அழிக்காது அப்படியே வைத்துள்ளனர். இதே போல் ஈஸ்டர் தாக்குதல் தடயங்களை அழிக்காது அப்படியே ஞாபகப்படுத்தி வைக்க முயன்றால் முஸ்லிம்களின் நிலை என்னவாகும்? என்கின்ற கட்டுரையாளரின் கேள்வி மிக நியாயமானதும் சிந்திக்கத்தக்கதுமாகும்.

'இவ்வாறான கொள்கை வெறியர்களை உருவாக்கிய அமைப்புக்கள்- மத்ரசாக்கள்- கொள்கைப் பிரசாரங்கள் இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற தேசத்திற்கு பெரும் விசமாகும்' என்கிறார் சாஜித். கொள்கை ரீதியான பிரசார இயக்கங்களால் காட்டிக் கொடுப்புக்கள் சிலவும் பழிவாங்கல்களும் அரங்கேறின என்பது உண்மையானாலும் மத்ரசாக்கள் கொள்கை வெறியர்களையும் பிரிவினைவாதத்தையும் உருவாக்கின என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசியல் வாதிகளும்; ஈஸ்டரால் பாதிப்புக்கள்ளாகினர். அவர்கள் பதவிகளையும் துறந்தனர். எனினும் அவர்களால் சாதிக்க முடிந்தவைகள் இன்னும் எவ்வளவோ இருந்தும் அவர்களின் மௌனங்கள் எதிரிகளை அதிகமதிகம் இனவாதிகளாக்கியது என்பது உண்மையாகும்
முஸ்லிம்களுக்கும் இத்தாக்குதலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை இலங்கையிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் நிரூபிக்க எத்தனம் மேற்கொண்டது போல் ஜம்இய்யத்துல் உலமாவும் அதனைப் பலவழிகளிலும் செய்து காட்டியது என்கிறார் கட்டுரையாளர்.

எது எவ்வாறினும் சஹ்ரான் குழுவினரின மிலேச்சத்தனமான காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித்தாக்குதல் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பாதித்துள்ளது. சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த முஸ்லிம் எதிர்ப்புப் பேரினவாதிகளுக்கு உரமாக மாறியுள்ளது. அரசியல்-கல்வி-பொருளாதாரம்-சுற்றுலா-வெளிநாட்டுத் தொடர்பு-மார்க்கப் பிரசாரம்-மத்ரசாக்களின் இயல்பான செயற்பாடு-இன உறவு நிகழ்வுகள்-கலாசார உடைகள் மீதான விமர்சனப் பார்வை உள்ளிட்ட எல்லாத்தரப்புக்களிலும் சந்தேகக் கண்கொண்ட பார்வையினை ஏற்படுத்தியுள்ளது.

'சஹ்ரானின் தாக்குதலுக்குப் பின்னர்தான் இவ்வாறு...' என அங்காலாக்கின்ற சூழலை இக் கொலை வெறித்தாண்டவம் உருவாக்கியுள்ளது. இதிலிருந்து முழுமையாக மீண்டு மீளெழும் சந்தர்ப்பம் எல்லாவற்றிலும் எற்பட வேண்டும். அவைகளுக்கான உரமாக சாஜிதின் இப்பிரதியும் அமையும் என்பதே எமது பார்வையாகும். இதனை மாற்று சமூகத்தரப்பினரையும் சென்றடைய வைக்கக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பது சமூக- இலக்கிய ஆர்வலர்கள் மீதுள்ள பொறுப்பாகும்.

(நுால் மீதான முழுப்பார்வையினையும் வாசிக்க.இந்த லின்ங்கிற்குள் நுழையவும்....www.alisnews. com)


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts