எமது நிருபர்
Posted By Admin | Posted On 2019-10-09 12:09:03 | Views 968

(எஸ்.அஷ்ரப்கான்)

லக்ஸ்டோ மீடியா, ஆ.கே.மீடியாவும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடாத்தும் "திறமைக்கான தேடல் விருது விழா - 2019" கலை கலாச்சார விழாவும் தேசாபிமானி விருது வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை (12.10.2019) ஆம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிரேஷ்ட ஒலிப்பதிவாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் லக்ஸ்டோ மீடியா, ஆ.கே.மீடியா ஆகியவற்றின் தலைவர்களான கலைஞர்கள் ஏ.எல்.அன்ஸார், ராஜகவி ராகில்  ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் டாக்டர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் விசேட அதிதிகளாக முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.முஹம்மட் முஸ்தபா, கிழக்கு மாகாண முதலமைச்சின் பிரதம செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். (எஸ்.அஷ்ரப்கான் - 0772348508)

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை