எமது நிருபர்
Posted By Admin | Posted On 2019-10-09 12:03:55 | Views 986

(எஸ்.அஷ்ரப்கான்)

வியூகம் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் நஷ்டத்தை இலாபமாக்குவது எப்படி? என்பது தொடர்பான  இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 12.10.2019 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு

சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

வியூகம் ஊடக வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஜனூஸ் தலைமையில் இடம் பெறவுள்ள இம்மாபெரும் கருத்தரங்கில் வளவாளராக

துபாய் நாட்டில் பிரபல தொழில் முயற்சியாளராய் விருதுகள் பல வென்ற எக்றோ டயோப் அமைப்பின் தலைவர் அஹமட் றஸீன் கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ளார்.

தொழில் முயற்சியாளர்கள், தொழில்   வாண்மை யாளர்களுக்கும், தொழில் தேடுவோர்,  வர்த்தகர்கள், மாணவர்கள்,இளைஞர்; யுவதிகளுக்கான இவ்விலவச கருத்தரங்கில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 0774073361 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts