பாறுக் ஷிஹான்
Posted By Admin | Posted On 2019-10-08 16:50:04 | Views 987

பாறுக் ஷிஹான்

 

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து காணாமல் போன   மீனவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளராகிய நீங்கள் சொல்லும்வரை  தனக்கு எதுவும் தெரியவில்லை என   துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்.

 காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து ஊடகவியலாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை(8)  தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமைச்சரை  கேட்டபோது மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த  18.09.2019 ஆம் திகதி காணாமல் போன   சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும் தற்போது திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் கண்டுபிக்கப்பட்டுள்ளனர்  என  தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவ்வாறு காணாமல் சென்று கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரின் உதவியுடன் சொந்த ஊருக்கு அழைத்து வர அப்பகுதி   மீனவ சங்கங்கள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில்  ஊடகவியலாளரின் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த அவர்   காணாமல் போன மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில்  நீங்கள் கேட்டதன் பின்னரே தனக்கு குறித்த விடயம் தெரியவருவதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் குறிப்பிட்டார்

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts