கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-10-01 22:03:48

அந்த காலம்

நீலாவணையூர் வாணு

சென்ற காலம்
அதுவே எமக்கு நல்ல காலம்
மனங்களில் மூட்டை முடிச்சுகள் இன்றி.. மற்றவர் தொல்லைகள் இன்றி.. நிம்மதியாய் இருந்த காலம்..
அயலவர் அடுப்பங்கரை அறிந்து... அடுத்தவர் பசி தீர்க்கும் காலம்...
பெரு நாட்கள் என்றால்...
பெருவாரியாய் பலகாரங்கள் செய்து.. பகிர்ந்துண்ட காலம்...
இயற்கையின் கொடையை..
இயல்பாய் பெற்ற காலம்
சுத்தமான காற்றை
சுகமாய் அனுபவித்த காலம்
பெரியார் சொல்லை
சிறியார் மதித்த காலம்
இதனால் ஒழுக்க விழுமியங்கள் ஓங்கியகாலம் சுயநலமின்றி
பொது நலம் பொங்கிய காலம் சிட்டுக்கள் எல்லாம்
சுதந்திரமாய் சிறகடித்த காலம்
சின்னஞ் சிறிசுகளும்
சிங்காரமாய் சிரித்து மகிழ்ந்த காலம் ஆரவாரமின்றி
ஆரோக்கியமாய் உண்டு
நோயின்றி நூறாண்டு வாழ்ந்த காலம் அடிப்படை தேவையுடன்
போதும் போதும் என்ற
தாராள மனம் கொண்ட
மக்கள் கொண்ட காலம்
இக்காலம் எப்போது தற்காலம் ஆகும் அதுவே எமக்கு பொற்காலம் !.   


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts