ஏ.எல்.எம்.ஷினாஸ்
Posted By Admin | Posted On 2019-09-29 10:50:24 | Views 966

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஒன்றுகூடல் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் கல்லூரியின் அதிபருமான எம்.ஜே அப்துல் ஹஸீப் தலைமையில் பாடசாலையின் அதிபர் மண்டபத்தில் நேற்று (28) இரவு நடைபெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.வலீத் கூட்டத்தை வழிநடத்தினார். பாடசாலையின் பிரதி அதிபர் ஏ. முஹம்மட் அன்சார், அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.மர்ஸூக் பழைய மாணவர் சங்கத்தின் உப செயலாளர் சட்டத்தரணி சி.ஐ.எம். சன்ஜீத் உட்பட பாடசாலையின் பழைய மாணவர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டனர். பாடசாலையின் கல்வி அபிவிருத்தி, பௌதிக வளம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts