கலை இலக்கியம் | கல்வி | 2019-09-17 21:59:26

புறப்படு புது விடயலுக்காய்

புறப்படு புது விடியலுக்கு

ஒலுவில் ஆதிக்
புது விடியலுக்காய் 
புதிதாய் புறப்பட்டு இருக்கும்
வாலிபர்களே வீழ்ந்து விடாதீர்கள் 
நீங்கள் வீழ்ந்தால் இவ்வுலகம் வீழ்த்த காத்திருக்கின்றது

இளைஞனே  நீ எழுந்து வா
நம்பிக்கையுடன் விரைந்து வா
தோல்வி உடைத்து வெற்றியை நோக்கி ஓடி வா

நாள் தோறும் உன்னை 
புதுப்பித்துக் கொள்
உலகம் போற்றும் இளைஞனாய் நீ மாறிவிடுவாய்

போதைக்கு அடிமையாகி
பொல்லாத நோய்க்கு இரையாகி 
உன் வாழ்க்ககையை மண்ணாக்காமல் உனக்காக 
காத்திருக்கும் இவ்வுலகை
வென்று விட எழுந்து வா இளைஞனே

வீதி யோரங்களில் அமர்ந்து
வெட்டி பேச்சு பேசியபடி 
உன் காலத்தை வீணாக்காமல்
காலம் உனக்காக காத்திருக்கின்றது வீர நடைபோட்டு எழுந்து வா இளைஞனே 

காதல் , காமம், கோபம்,பொறாமை
இவை உன் வெற்றிக்கு 
போட்ட தடைவேலி புரிந்து கொள் இளைஞனே 

உலகம்  இருண்டு விட வில்லை
நீ தான் உன் கண்னை மூடிக் கொள்கின்றாய்  
விழித்து விடு உன் கண்ணை 
நீ சரித்திரம்  படைக்க  உன்னை அழைக்கின்றது இவ்வுலகம் 

நம்பிக்கையுடன் நீ நிமிர்ந்து நில் 
துணிவுடன் செயல்படு
பயத்தை தாழ்த்தி விடு 
முடியாது என்ற வார்த்தையை முறித்து விடு 
நீ உன் வாழ்வில் உயர்ந்து விடுவாய் இளைஞனே


உயிர் உள்ளவரை போராடு
உலகம் உள்ளவரை வெற்றி நடைபேடு


Our Facebook

Popular Posts