உள்நாடு | பொருளாதாரம் | 2019-09-17 00:39:23

கல்முனையில் இ.போ.சபை உழியர்கள் பணி பகிஸ்கரிப்பு, பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதம், தீர்வு இல்லையெனில் உண்ணாவிரதம்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை வளாக ஊழியர்கள் தமது சம்பள மறுசீரமைப்பை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி  (16.09.2019) பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் இதனால் கல்முனை பஸ் நிலையத்திலிருந்து வெளி இடங்களுக்கு செல்லும் சகல பஸ் போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டன.
தமது நியாயமான கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதோடு உண்ணாவிரதத்திலும் ஈடுபடப் போவதாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

பதாதைகளை ஏந்தி கோசங்களை வெளியிட்ட ஊழியர்கள் பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
2019 ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தினூடாக அதிகரிக்கப்பட்ட 2500.00 ரூபா சம்பள உயர்வை ஜூலை மாதத்திலிருந்து இ.போ.ச ஊழியர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் வருடாந்த சம்பள உயர்வு சகல உத்தியோகத்தர்களுக்கும் உடன் வழங்கப்பட வேண்டும். போன்ற 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  இந்தப் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts