கலை இலக்கியம் | அபிவிருத்தி | 2019-09-16 11:18:57

வேரோடு சாய்ந்தது மரம்

மருதமுனை நிஸா

வேரோடு சாய்ந்த மரம்

****************************

மரத்திற்கு உரமிட்டு
நாட்டுக்கு வரமாய் கிடைத்த
ஆலமரம் சாய்ந்ததே அன்று!.

தளையை கிள்ளி எறியவில்லை
எம் - தலையையே வேரோடு அழித்துவிட்டர்!..
தலை திருக்கக்கப்பட்டு
இன்றோடு பத்தொன்பது ஆண்டாயிற்று!..

பாரினில் அவர் பாதம்
யாருக்கும் பாதகம் செய்யவில்லையே..
யாரோ செய்த சூழ்ச்சி - இதற்கு
யாரும் இல்லை சாட்சி..

மக்களோடு மக்களாக...
மக்களுக்காய் மகனாக..
மாமனிதர் வாழ்ந்தாரே...
மாசுபிடித்த நெஞ்சங்களால் பஞ்சாய்ப்
பறந்தாரே அன்று...

அன்னையர் அன்னியர் ஓலமும்...
கன்னியர் கண்களில் கண்ணீரும்...
மூத்தார் முதியவர் கதறலும்...
ஆடவர் அனைவரும் அவலமும்..
தந்தையர் தனையர்கள் தடம் புரழுதலும்..
அன்றைய கண்ணீரை கோர்த்தால்
ஆறொன்டு தயாரித்திருக்கலாம்...

ஆழ்மனதை தொட்ட
ஆத்மா அஷ்ரப் எனும் தலைவர்
ஆயிரம் விளக்குடன்
ஆதவன் எழுந்த வந்தான் எனும்
ஆயிரம் அர்த்தம் தரும் வரிகள் தந்தவர்!.

முடிந்து போனது ஆனாலும்
முடியாது அவரது புராணம்..
முற்றுப்புள்ளி இல்லை அவருக்கு
முழு மனங்களையும் கவர்ந்த
கவிஞனவர்!..

எப்படி மறப்பது?...
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts