உள்நாடு | சமூக வாழ்வு | 2019-09-12 19:47:31

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கை – இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் கருத்தாடல் நாளை

தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக இலங்கை வந்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன், இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த முக்கியஸ்தர்களுடன் சினேகபூர்வ சந்திப்பொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாளை ஏற்பாடு செய்துள்ளது.

“இலங்கை இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் கருத்தாடலும்” எனும் தலைப்பில் இலங்கையிலுள்ள அரசியல், சிவில் சமூக மற்றும் ஊடகத்துறைசார் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (13) மாலை 4.00 மணிக்கு கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவை அந்தஸ்த்தற்ற ஊடகத் துறை அமைச்சரும் பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜயவர்தன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில், முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவருமான பேராசிரியர் காதர் மொஹிதீன் விஷேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில், சிறப்பு கௌரவ அதிதிகளாக IUML – மலப்புரம் மாவட்ட தலைவர் சாதிக் அலி தங்கல், இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்களான ஈ.ரீ. முஹம்மத் பஷீர், பீ.வீ. அப்துல் வஹ்ஹாப், கே. நவாஸ்கனி, முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்ர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரதி செயலாளர் ஆளுர் ஷா நவாஸ், எஃபிசன்ட் ட்ரேடின் ஏஜன்ஸி தனியார் கம்பனியின் தலைவர் சதக் அப்துல் காதர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹ்பூப், மணிச்சுடர் தமிழ் தினசரி ஊடகவியலாளர் திருச்சி சாஹுல் ஹமீத் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts