பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-09-12 19:37:54

பாண்டிருப்பு ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீ மிதிப்பு 

கல்முனை - பாண்டிருப்பு  ஸ்ரீ வட பத்திரகாளி  அம்பாள்  ஆலய வருடாந்த தீ மிதிப்பு நேற்று புதன் கிழமை (11) இடம் பெற்றது.

மகாபாரத  இதிகாச நாயகர்களான  பாண்டவர்கள் பதி எனப் போற்றப் படும்  அருள் வளமும்  திருவளமும்  நிறைந்து  தெய்வருள்  சக்திகளை  தன்னகத்தே  கொண்டு அருளாட்சி செய்யும்  பாண்டிருப்பு புண்ணிய பதியில்   கோயில் கொண்டு  நாடி வரும்  பக்தர்களுக்கு  வேப்ப மர  நிழலில்  மகா சக்தியாக  விளங்கும் அன்னை ஸ்ரீ  வட  பத்திர காளியம்பாளின்  வருடாந்த உற்சவப் பெரு விழா   கடந்த 03ஆம் திகதி  திருக்  கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து ஒன்பது  நாட்கள் விசேட அலங்கார பூசைகள் மற்றும் கிரிகைகள் நடைபெற்று நேற்று 09 ஆம் நாள் புதன் கிழமை (11) காலை விசேட பூசையுடன்  தீ மிதிப்பு இடம் பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் தீ மிதிப்பு மற்றும் இறுதிநாள் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts