பிராந்தியம் | அரசியல் | 2019-09-11 22:02:54

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்கள் நாட்டிற்கு அவசியமானது – பாராளுமன்ற உறுப்பினர் சிரியானி விஜேயவிக்கிரம தெரிவிப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' ஜனாதிபதி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை கையளிக்கும் நிகழ்வு
(09) கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிரியானி விஜேயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களிடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை கையளித்தார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்கள் நாட்டிற்கு அவசியமானது என்று தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றும் போது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் பயனுள்ள பல வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. போதையற்ற இலங்கை தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இறுதிவரை பயணித்தார். பாடசாலை மாணர் சமூகத்தை பாதுகாப்பதன் அவசியம் பற்றி ஜனாதிபதி உறுதியாக செயற்பட்டார். இறுதியில் போதைப் பொருள் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரணதண்டனை வழங்குவதற்கும் தீர்மாணித்தார். ஆனால் இதனை சில சுயநலவாத அரசியல் சிந்தனையுள்ளவர்கள் எதிர்த்தார்கள் விமர்சனமும் செய்தார்கள்.

'கிராமசக்தி' தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக கிராம மட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட்டன. தேசிய பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு, போசாக்கு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதி வழங்கி வருகிறார். இன்று நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக சுத்தமான குடிநீரை எதிர்கால சந்ததிகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக இங்கு நாம் இதனை வினியோகம் செய்கிறோம். இப்போது புதியதோரு பாதையில் செல்கிறோம் என்றார்.

மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட சுமார் 20க்கு மேற்பட்ட முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு இதன் பொது குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி யு.எம்.நிஸார், காரைதீவு பிரதேச அமைப்பாளர் வி.கிரிஷ்னமூர்த்தி, அம்பாறை மாவட்ட தமிழ் - முஸ்லிம் பிரதேச ஸ்ரீலங்க சுதந்திர கட்சி அமைப்பாளர் சர்மில் ஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts