எம்.என்.எம் அப்ராஸ்
Posted By Admin | Posted On 2019-09-08 15:37:45 | Views 968

(எம்.என்.எம்.அப்ராஸ்)

 விசேட கல்விப் பிரிவு மாணவர்களுக்கான  மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில்
 கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப் போட்டிகள் நேற்று (05)  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 12வயதின் கீழ் பிரிவின் பெண்களுக்கான ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட J.F. ஜெஸ்னா
 (100m ஓட்டம் - முதலாமிடம், 80m ஓட்டம் - இரண்டாமிடம் , 60m ஓட்டம் - இரண்டாமிடம்)

12வயதின் பிரிவின் ஆண்களுக்கான பந்து எறிதல் நிகழ்ச்சி, கோன்ஸ் சேகரித்தல் நிகழ்ச்சி போட்டியில்
J.M. மாஹிஸ் என்ற மாணவன் முதலாமிடத்தையும்,

M.N. வலீத் 30m(wheel chair)ஓட்ட நிகழ்ச்சியில்  இரண்டாமிடத்தையும்  பெற்றுக்கொண்டனர்.

இம் மாணவர்களை நெறிப்படுத்திய பாடசாலையின் விசேட கல்விப் பிரிவு ஆசிரியைகளுக்கும் மேலதிக பயிற்சிகளை வழங்கிய உடற்கல்வி பிரிவினருக்கும் மற்றும் பல்வேறு   வழிகாட்டல்களை வழங்கி இம்மாணவர்களை ஊக்குவித்து ஒத்துழைப்பு வழங்கிய மாண்வர்களின்  பெற்றோர்களுக்கும் பாடசாலையின்  அதிபர் எம்.ஐ. எம்.ரசாக் மற்றும் , பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்தனர்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts