உள்நாடு | கல்வி | 2019-08-26 21:11:33

அரபு எழுத்து பயிற்சி முகாமும் கருத்தரங்கும்

(மருதமுனை நிஸா)
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாட்டில் (தொளஸ் மகே பான) பன்னிரண்டு மாத விளக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ்  அரபு எழுத்துப் பயிற்சி முகாம் தாருல் ஹுதா அரபு கல்லூரியின் விரிவுரையாளர் எம்.ஜே.எம்.லாபிர்  - நளீமி அவர்களின் தலைமையில் இன்று (26.08.2019) மருதமுனை தாருல் ஹுதா அரபு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது, இரு அமர்வுகளாக நடைபெற்றது. முதலாவது அமர்வாக கருத்தங்கும்  இரண்டாவது அமர்வாக அரபு எழுத்தணிப் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இக்கலூரியின் 251 மாணவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். 40 மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்கள்.

 வளவாளராக அஷ்-ஷெய்க் ஏ.என்.முஹம்மத் ஜுனைத் - நளீமி அவர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஏற்பாட்டாளர்களான
கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச். பௌசுல் ஹிபானா, ஏ.ஏ.அப்துல் அசீஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts