எமது நிருபர்
Posted By Admin | Posted On 2019-08-20 08:05:38 | Views 869

(இஸ்லாமாபாத் நிருபர்)

கிழக்கு இளைஞர் அமைப்பு நடாத்திய 2019 இற்கான இளைஞர் விருது விழாவில் சிறந்த சமூக ஊடக தொலைக்காட்சியாக வியூகம் டீவி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (17) அட்டப்பள்ளம் புளூ சேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த விருதினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பிரதம ஆலோசகர் பேராசிரியர் லக்ஸ்மன் ரோஹன பியதாசவிடமிருந்து  வியூகம் டீவியின் நிறுவுனர், பணிப்பாளர் எஸ்.ஜனூஸ் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், தெற்கு அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம், தென் கிழக்கு பல்கலைக்கழத்தின் கலைப்பிரிவு பீடாதிபதி, கலாநிதி ரமீஸ் அபூபக்கர் மற்றும் கல்வியியலாளர்கள்,புத்திஜீவிகள், கிழக்கு இளைஞர் பேரவையின் உயர்பீட உறுப்பினர்கள் என பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டனர். 

(EYO BEST Social Media Tv Award 2019) இற்கான சிறப்பு விருதினை தட்டிக் கொண்ட வியூகம் டீ.வி கடந்த 2015 முகநூலில் ஒரு புதுப்புரட்சியாய் ஆரம்பிக்கப்பட்டு சமூகம்,அரசியல், கலை,கலாசாரம்,சமயம் என பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. மேலும், குரலற்ற மக்களின் குரல் எனும் மகுட வாசகத்தை கொண்டிருக்கும் வியூகம் சமூக ஊடகமானது வெகுஜன மக்களின் அபிலாஷைகள்,உணர்வுகள், பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொண்டு வருவதன் ஊடாக சர்வதேசம் எங்கும் மக்கள் மனதுகளில் வியாபித்திருப்பது விசேட அம்சமாகும்.

வியூகம் டீவியின் நான்கு வருட சமூக ஊடக பயணத்தில் இந்தியா, கத்தார்,துபாய் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கிருந்தும் பல விசேட நிகழ்ச்சிகளை வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும், வியூகம் டீ.வியானது இதுவரை 1000 இற்க்கும் மேற்பட்ட பெறுமானமிக்க நேரலை காணொளிகளை சொந்த தயாரிப்புக்களாகவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts