ஏ.எல்.எம்.ஷினாஸ்
Posted By Admin | Posted On 2019-08-11 14:18:16 | Views 856

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இனங்களுக்கிடையில் ஒற்றுமையினையும்,புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிப்பது சிறந்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சர்மில் ஜஹான்  வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு

இன்றைய தினத்தில் நாட்டின் நிலைமையினை கவனத்திற் கொண்டு இனங்களுக்கிடையில் ஒற்றுமையினையும்,புரி்ந்துணர்வினையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிப்பது சிறந்தது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சர்மில் ஜஹான் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலக முஸ்லீம் மக்கள் ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாளை கொண்டாடும் இந்த வேளையில்  இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நாட்டின் இறைமைக்கு ஒரு போதும் பங்கம் விளைவித்ததில்லை,  நாட்டின் உரிமையினையும்,ஏனைய சமூகங்களின் கலாச்சாரங்களையும் மதித்தே வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் எமக்கும் ஏற்பட்டுள்ள சந்தேக நிலை அகன்று மீண்டும் இயல்பு வாழ்வு ஏற்பட இன்றைய தினத்தில் பிரார்த்தனைகளை செய்யுமாறும் மேலும் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடல் கடந்து சென்ற வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகள் நேற்றைய தினம் அரபா நோன்பு நோற்று இன்றைய தினம் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து  ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழத்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts