எம்.எம்.ஜபீர்
Posted By Admin | Posted On 2019-08-11 14:05:02 | Views 896

(எம்.எம்.ஜபீர்)

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தியாகத்தை வலியுறுத்தும் இந்த தியாகத்திருநாளில் நிரந்தரமான சமாதானத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்ஸாம் கூறுகிறன. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாசார சூழலில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றடுப்பதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட இப் புனித நாளில் திடசங்கற்பம் பூணுவதுடன். இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடன் வாழ நாம் அனைவரும் பிரத்திப்போம்.

 

இந்த புனிதமான ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை  கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும், வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts