பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-08-11 10:42:01

அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறியின் அறிமுக நிகழ்வு

(றாசிக் நபாயிஸ்)

அம்பாரை மாவட்டம் இயற்கை அனர்த்தங்களுக்கு இலகுவாக பாதிக்கப்படும் தேசமாகும். பிரதேச மட்டத்தில் அனர்த்தங்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும். இதன் அடிப்படையில் சமூக மட்டத்தில் அனர்த்த அபாய குறைப்பு மற்றும் செயல்பாட்டை முறையாக கொண்டு செல்வதற்குமான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறி ஒன்று அம்பாறை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக ஆரம்ப அறிமுக நிகழ்வு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், எம்.ஏ.சி.எம்.றியாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அம்பாரை மாவட்ட செயலத்தின் மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்காவின் தலைமையில் (05) ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் WA.தர்மசிறி அவர்களும் விஷேட அதிதிகளாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர், சுகத் திஸாநாயக்கா மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி அப்துல் லத்தீப், 24வது கட்டளைத் தளபதி பிரிகேடிய, ஏ.ஜ.மாரசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

இதில் சிங்கள, தமிழ் மொழி மூல 300 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டார்கள். இரண்டரை மாத காலத்தைக் கொண்ட இக்கற்கை நெறியானது ஆகஸ்ட் 13ஆம் திகதி முதல் செப்டம்பர் 24ஆம் திகதி வரை வாரத்தில் ஒரு நாள் அடங்கலாக நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்
அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூல பிரதேச செயலகம், உள்ளூராட்சி சபையில் கடமையாற்றும் சமூக தொடர்பாடல் உத்தியோகத்தர்கள் (கள உத்தியோகத்தர்கள்) 100பேருக்கு இப்பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts