பிராந்தியம் | கல்வி | 2019-08-04 16:05:13

தமிழ் மொழி மூல அரச ஊழியர்களுக்கு சிங்கள பாடநெறி 

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )

அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் அனுசரணையோடு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தி வந்த இரண்டாம் மொழி சிங்கள பாடநெறி பூர்த்தி விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மருதமுனை பொது நூலக மண்டபத்தில்  (02) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.எம் அன்சார், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.எம்.லத்தீப், கல்முனை வடக்கு பதில் பிரதேச செயலாளர் என். நவநீதராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு படநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.
தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெற்ற இந்த பாடநெறியை கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கலந்துகொண்ட அதிதிகளும் இங்கு கௌரவிக்கப்பட்டார்கள்.
சிங்கள மொழி பாடநெறியை பூர்த்தி செய்து கொண்ட அரச ஊழியர்களின் கலை கலாசார நிகழ்வுகள் அனைவரினதும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தன.

பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அரச ஊழியர்கள் இரண்டாம் மொழியை கற்றிருக்க வேண்டியதன் அவசியம் பற்றி அதிதிகள் இங்கு விளக்கி கூறினார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts