கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-08-02 18:10:31

(கவிதை அரங்கு) வைத்தியர் ஷாபி அவர்களே!

கவிதை அரங்கு

வைத்தியர் ஷாபி அவர்களே!
=========+==============
ஒற்றை ஆளாய் நீங்கள் குறிவைக்கப்பட்டபோதும்
ஒட்டுமொத்த சமுகத்தின்மீதே போர்ப்பிரகடனம்
கற்ற வித்தைகள் அனைத்தையும் களத்தில் இறக்கியும்
கச்சை மட்டுமே மிச்சமானது அவர்களுக்கு

தலைவிரித்தாடும் இனவாதம் _அதில்
வலைவிரித்து இரைதேடும் பிடிவாதம்
நிலை குலையவைக்கும் இந்த குரூரம்
நீடிக்க விடலாமா நண்பர்களே

அடக்கி ஆளும் ஆசை மேலீட்டால்
முடக்கி வாழ முண்டியடிக்கியிறார்கள்
இனவாதம் இன்னும் தணியவில்லை
கொளுத்திப்போட்டு குளிர்காய கும்பலே காத்திருக்கு

விடம் கக்கும் விஷமிகளெல்லாம்
வினை விதைத்து திணை அறுப்பதா
புடம் போடப்பட்ட பொக்கிஷமே
புரியவை ,போதை தெளியட்டும்

அடிபட்ட பாம்புகள் அமைதி காப்பதில்லை
தடிகளை தயார் படுத்து
தருணம் வரும் தயங்காதே

கூலிக்கு மாரடிக்கும் கூடாரமெல்லாம்
காலியாகும் நாள் கண்ணெதிரே தெரிகிறது
வேலிக்கு இணையாய் வீராப்பை காட்டு
வெருண்டோடச்செய்யலாம் வீனர்களை

சட்டை செய்யாத சட்டங்களும்
சட்டைகளில் தூசு படியாத சான்றோர்களும்
சாக்கடையிலும் முத்து தேடும் தலைமைகளும் -எங்களுக்காக
சாட்சி சொல்ல படியேறப்போவதில்ல

சாது மிரண்டால் சரித்திரமே தாங்காது
தரித்திரம் இவர்கள் எம்மாத்திரம்
சாதித்துக்காட்டு தலைவா நீ
சரித்திரம் உன்னை தத்தெடுக்கும்

தாக்கவென்று கூடிய காட்டுக்கூச்சல்களுக்கு
தக்க பதிலளிக்க வேண்டுமென்றால்
தாக்கல் செய்யுங்கள் வழக்குகளை
தலைதெறிக்க ஓடட்டும் நம்ரூதுகள்

உலுக்கி எடுக்கப்பட்ட வைத்தியரே
உங்கள் கைகளில் இருக்கு சமூகத்தின் மானம்
உச்சபட்ச தண்டனை கொடுக்க தயாராகுங்கள்
உங்களோடு நாங்களும் வருகிறோம்இ
ன்ஷா அல்லாஹ்

உங்களுக்காக கண்ணீர் விட்ட
உரிமையில் கேட்கிறோம்
மூக்கணாங் கயிறு கழன்ற மூர்க்கத்துக்கு
முடிவுகட்ட முன்வாருங்கள்

___ கம்மல்துறை இக்பால்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts